மாமல்லபுரம்

அந்த பழைய மாமல்லபுரம் சாலை வாசலில் விநாயகர் வழிக்காட்ட. அந்த பழகிய பழைய சாலையில் வேகம் கொண்டு சென்றோமே.

.

முதல் காலை கதிர் கரை தொடும் முன் அந்த கதிரவனை காண காற்றோடு கரையாமல் வேகத்தோடு சென்றோம். சாலை மத்தியில் வளைந்து நெளிந்து வழிக்காட்டுதே அழகிய விளக்குகள், இத்தனை நாள் என்னை காணாமல் சென்றாயே என்று கொஞ்சம் கோபமும் கொண்டதே.

.

தூரம் செல்ல செல்ல, பின்னே விட்டு சென்றோமே எங்கள் எண்ணங்களை, முன்னே செல்ல செல்ல இரு கை நீட்டி ‘ஓ’ என்று கத்தவா என்றால் என்னவள்.

.

காரிருள் சுழூதே எங்களை, அதில் அதிகாலை என்ற சாயல் இல்லை. சற்று பயம் எட்டி பார்த்தாலும், மனமோ கவிதை எழுத அமர்ந்ததே ” கண்ணிட்ட மையை வான் எட்ட ஏன் செய்தாய்” என்று. இன்னும் கொஞ்ச தூரம் சென்றோமே.

.

இருளின் வழியாய், தூரத்து வான் கூரையின் ஓட்டைகள் கண் பட்டதே, அவை பால் வீதி சிந்தி மிளிரூம் நட்சத்திர கூட்டமே, மெல்ல மெல்லச் சென்றோமே. வான் பார்த்து இரசித்து இரசித்து சென்றோமே.

.

இந்த பழைய மாமல்லபுரச் சாலை முடியுதே என்று எண்ணம் தோன்றும் நேரம் வந்தோமே மாமல்லபுர நுழைவாயிலில்.

.

நாங்கள் காண சென்ற அந்த முதல் கதிர், கடற்கரை கோயில் கோபுரம் தொட, கால் நீட்டி அமர்ந்தோம். காண கண்ணிரண்டு போதாது என்று வியந்தோம்.

.

ஒற்றை பாறை கொண்டு கோயில் அமைத்த மன்னன் அறிவேன், செதுக்கிய கலைஞன் எவனோ.?

.

கற்கள் மேலே அச்சடித்துப் போல் முகங்கள், இப்படி ஒரு கையொப்பம் இட்டவன் எவனோ என்றே எண்ணமெல்லாம் எண்ணுதே.

.

நந்தி கணக்கில்லாமல் இருந்தது, சிங்கம் கண்டேன், இறை உருவமெல்லாம் கண்டேன்.

.

சிம்மயாழி கண்டேன், ஞானிகள் சில கண்டேன், செவ்வக குளியல் கற்குளம் கண்டேன், அந்த உச்சியில் ஒரு புறம் நீல கடல் – மறுபுறம் நிலம் – அழகோ அழகு.

.

நகராத ரதம் பற்றி சொல்லவா, இரங்கநாதர் பார் கடலென்று உறங்கும் கற்சிலை பற்றி சொல்லவா. போர்க்களம் காட்சி இறைவி கொள்ள, வெண்ணை உருளை ஒன்றும் உலகை ஈர்க்குதே‌.

.

அங்கு கற்கள் எல்லாம் ஒர் கதை சுமக்கிறது. கேட்க மறவாதே.!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

Create your website at WordPress.com
Get started
%d bloggers like this: