ஓ பெண்ணே..!

என்னை கடந்து சென்ற பெண்ணே
மின் கம்பமென என்னை,
நிற்க செய்தாயே.!
.
அழகின் உருவம் நீயே
கவிஞன் பல எழுதிய கவியின் மெய்யே.!
என்னை சாய்த்து சென்றாயே.!
.
தூரம் நின்றே, உன் கண் ரசிக்க நினைத்தேன் – ஜான்சியின் வாளென உன் புருவம் மிரட்டுதே..!
நின்றே பறந்தேன்..!
.
உன் குரல் காற்றில் கசிந்ததும்
என் முகம் உன் பக்கம் திரும்புதே
உன் இதழ் சிந்தும் மொழி கண்டு,
நின்றே கரைந்தேன் நான்..!
.
குளிர் காற்றும் உன்மேல் பட்டு வெப்பம் ஆகுதே – உன் மூக்கின் நுனியில் பனித்துளியென வேகுதே..!
மர்மம் என்ன என்ற
சிந்தனையில் சிதைந்தேன் நானே..!
.
உன் நெற்றியில் விண்மீன் வசிக்க ஆசைகொள்ள.!
அந்தப் பொட்டு செய்த சாதனை என்ன.?
உற்றே பார்த்தேன்..!
.
முகமே உன் முழு முகமே ஆண்களின் நாணம் போரிட்டு தோற்ற இடமே,
மௌனம் கொள்கிறேன்..!
.
உன் கார் கூந்தல் – காற்றின் குழல்
தனியொரு இசை கேக்குதே
மறந்தேன்.. மெய் மறந்தேன்.!

.
கற்சிலைகள் கிசுகிசுக்குதே
சிற்பி வடிக்கா சிலையா இவள் என்று பெருமூச்சு கொள்ளுதே..!

.
ஆண் நான் என்ன செய்வேன் பெண்ணே..!
.
ஓ பெண்ணே..!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

Create your website at WordPress.com
Get started
%d bloggers like this: